திருமுருகநாத சுவாமி கோவிலில் முகூர்த்தக்கால் பூஜை!
ADDED :3842 days ago
அவிநாசி: திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம், மே 29ல் நடைபெறுகிறது. யாகசாலை பூஜை, அடுத்த மாதம், 23ல் துவங்குகிறது. அதையொட்டி, கோவில் முன்பகுதியில், யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நடும் பூஜை @நற்று நடைபெற்றது. அதன்பின், முகூர்த்தக்கால் நடப்பட்டு, தண்ணீர், பால், தயிர் அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது. செயல் அலுவலர் சரவணபவன், திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள் ராமசாமி, குமாரசாமி, சுப்ரமணியம், குப்புசாமி, வேலுசாமி, அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.