உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்தங்குடி கோயில் கும்பாபிஷேகம்

ஆத்தங்குடி கோயில் கும்பாபிஷேகம்

காரைக்குடி, :ஆத்தங்குடி ஆ.முத்துப்பட்டணம் லோகநாயகி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் ஆரம்பமானது. நேற்று காலை 5.30 மணிக்கு ஆறாம் கால யாகசாலை பூஜை, 7.30 மணிக்கு பிம்மசுத்தி, ரக்ஷாபந்தனம், 9 மணிக்கு கலசம் புறப்பாடும் நடந்தது. 9.30 மணிக்கு சிவாச்சாரியார்கள், வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, விமானம்,ராஜகோபுர கும்பாபிஷேகம் நடந்தது. 10 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகமும், 12 மணிக்கு மஹாபிஷேகமும் நடந்தது. நிகழ்ச்சியில், கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமி, துலாவூர் ஆதீனம் ரவீந்திரசுவாமி, கோயில் டிரஸ்ட் தலைவர் நாச்சியப்பன், செயலாளர்கள் மீனாட்சிசுந்தரம், சூரியவில் நாச்சியப்பன், பொருளாளர் சிதம்பரம், கமிட்டி உறுப்பினர்கள் ஆர்.எம்.சொக்கலிங்கம், நாச்சியப்பன், முத்து உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !