திருமலையில் வசந்தோற்சவ விழா நிறைவு!
ADDED :3837 days ago
திருப்பதி: திருமலையில் மூன்று நாட்கள் நடக்கும் வசந்தோற்சவ விழா மூன்றாம் நாளான இன்று (ஏப்.4ல்) நிறைவு பெற்றது.
வழக்கமாக மாலையில் நடைபெறும் இந்த விழாவானது, சந்திரகிரகணத்தை முன்னிட்டு காலை 7.30 மணியளவில் நடந்து முடிந்தது. முன்னதாகவே சுவாமிக்கு மஞ்சள் நீராட்டுவிழா நடத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற ஊர்வலத்தில் உற்சவர் மலையப்பசுவாமியுடன் ராமர், சீதா, லட்சுமணனர், ஆஞ்சநேயர் ஆகிய உற்சவமூர்த்திகளும் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.