உரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
ADDED :3840 days ago
மஞ்சூர் : மஞ்சக்கம்பை உரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மஞ்சூர் அடுத்துள்ள மஞ்சக்கம்பையில் உள்ள உரியம்மன் கோவிலில் நடப்பாண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று, 6ம் தேதி சிறப்பு பூஜை, அம்மன் அழைப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. 7ம் தேதி கணபதி ஹோமம், மஞ்சக்கம்பை பஜாரில் இருந்து மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம், 2:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் உரியம்மன் கோவிலை சுற்றி மும்முறை தேர்பவனி வரும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.