திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம் கோலாகலம்!
ADDED :3901 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கோவிலில், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. நேற்று அதிகாலை, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ஆகியோர், திருமணக் கோலத்தில், மூலக்கரை சந்திப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். முன்னதாக, மதுரை கோவிலில் இருந்து புறப்பாடகிய மீனாட்சி அம்மன், பிரியாவிடை, சொக்கநாதர், சந்திப்பு மண்டபம் வந்தனர். பெற்றோரை, சுப்பிரமணிய சுவாமி வரவேற்றபின், கோவில் ஒடுக்க மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளினர். இன்று காலை 6 மணிக்கு, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.