உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமுத்தியாம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை!

சமுத்தியாம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை!

ஆனைமலை: ஆனைமலை அங்கலக்குறிச்சி பகுதியில் சமுத்தியாம்பிக்கை கோவிலில் பங்குனி உத்திர சிறப்பு பூஜைகள் நடந்தன. அங்கலகுறிச்சி,   ஆத்மநாத வனத்தில் அமைத்துள்ள சமுத்தியாம்பிகை மற்றும் கால சம்ஹாரபைரவர் கோவிலில் பங்குனி உத்திர சஹஷ்ர அபிேஷக விழா நடந்தது.    இதை முன்னிட்டு சமுக்தியாம்பிக்கைக்கு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  காலசம்ஹார பைரவருக்கு   1,008 வடை மாலைகள் சாத்தப்பட்டன. பின்னர் பக்தர்களின் வேதகோஷம் முழங்க ஆராதனை இடம்பெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு   அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !