உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குப்பையால் சீரழியும் நாதாதீஸ்வரர் குளம்!

குப்பையால் சீரழியும் நாதாதீஸ்வரர் குளம்!

பள்ளிப்பட்டு: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கரிம்பேடு நாதாதீஸ்வரர் கோவில் குளம் மற்றும் வளாகம், குப்பை யால் சீரழிந்து வ ருகிறது. பள்ளிப்பட்டு அடுத்த, கரிம்பேடு கிராமத்தில் உள்ளது ஞானாம்பிகை உடனுறை நாதாதீஸ்வரர் கோவில். இது, திருத்தணி முருகன் கோவி லின் உபகோவிலாக உள்ளது. கோவிலின் கிழக்கு மற்றும் வடக்கே குளங்கள் அமைந்துள்ளன. கிழக்கு பகுதியில் உள்ள குளம் நடுவே நீராழி  மண்டபத்துடன், நீர் நிரம்பி காணப்படுகிறது. குளத்திற்கு சுற்றுச்சுவர் அல்லது வேலி அமைக்கப்படாததால், கோவில் வளாகத்தில் குவிந்துள்ள குப் பை, குளத்தில் குவிகிறது.  பிளாஸ்டிக் மற்றும் காகித கழிவுகளால், குளத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்து வருகிறது. மேலும், குளத்தின்  படிக்கட்டுகளும் சிதிலமடைந்து காணப்படுகின்றன. கோவிலின் மூலவர் சுயம்புவாக தோன்றிய லிங்கம். இது, திருமண தலம் என்பதால், கோவில்  வளாகத்தை ஒட்டி, திருமண கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. சிறப்புமிக்க கோவிலின் குளம் சீரமைக்கப்படாமலும், பராமரிக்கப்படாமல் குப்பை  குவிந்து மாசடைந்து வருவது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !