முசிறி மாரியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்
ADDED :3851 days ago
முசிறி: முசிறி, மேலத்தெரு மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. மேலத்தெரு மகா மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வரும், 12ம் தேதி நடக்க உள்ளது. கோவிலுக்காக விழா கமிட்டி சார்பில், இரண்டு லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டு, வெள்ளோட்டம் விடப்பட்டது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, புதிய தேரில் அம்மன் வீதி உலா வந்தார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.