முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :3851 days ago
கீழக்கரை: கீழக்கரை தட்டாந்தோப்பு தெரு முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை யொட்டி,நேற்று முன்தினம் விக்னேஸ்வரர் பூஜை, முதல் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு மேல் கீழக்கரை சொக்கநாதர் கோயில் குருக்கள் கல்யாணசுந்தரம் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். அன்னதானம் நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜையும், இரவில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சியும் நடந்தது.