பெருவளூர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3917 days ago
செஞ்சி: பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா பெருவளூரில் உள்ள திருப்பணிகள் செய்யப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோகிலாம்பாள் உடனுறை கோட்டீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அன்று இரவு கோட்டீஸ்வரருக்கும், கோகிலாம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு 8 மணிக்கு சிறப்பு ஹோமமும், 9.00 மணிக்கு திருக்கல்யாணமும் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனையும், சாமி வீதி உலாவும், வாண வேடிக்கையும் நடந்தது. இதில் உபயதாரர்கள் ராஜசேகர், ஜெயராமன், ஊராட்சி தலைவர் ராதிகா ரேணுகோபால், ஒன்றிய கவுன்சிலர் தனபாக்கியம் அண்ணாமலை, துணை தலைவர் தேவகி அழகேசன், திருப்பணிக்குழு தலைவர் ஜம்புலிங்கம், முன்னாள் அறங்காவலர்கள் ஆத்மநாதன், சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.