பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் தமிழ் புத்தாண்டு விழா!
ADDED :3834 days ago
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். புதுச்சேரி – திண்டிவனம் சாலை பஞ்சவடீயில் அமைந்துள்ள ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில், நேற்று தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 6.00 மணி முதல் இரவு 8.00மணி வரை பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.