பழநியில் குவிந்த பக்தர்கள்: 4 மணிநேரம் காத்திருப்பு!
ADDED :3834 days ago
பழநி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழநிகோயிலில் குவிந்த பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பழநியில் மலைக்கோயில், திரு ஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில், பட்டத்துவிநாயகர் கோயில்கள் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டன. சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மலைக்கோயில் படிபாதையில் திருமுருக பக்த சபா சார்பில் காலை 5 மணிக்கு படிபூஜை நடந்தது. பக்தர்கள் பால்குடங்கள், தீர்த்தகாவடி எடுத்து வெளிப்பிரகாரத்தை வலம் வந்து நேர்த்திகடன் செலுத்தினர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றனர். பொதுதரிசனம், வி.ஐ.பி., கட்டணம் உட்பட அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.