உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பனங்காட்டீஸ்வரர் கோவிலில் சூரிய வழிபாடு பூஜை!

பனங்காட்டீஸ்வரர் கோவிலில் சூரிய வழிபாடு பூஜை!

விக்கிரவாண்டி: பனங்காட்டீஸ்வரர் கோவிலில் சூரிய வழிபாடு பூஜை துவங்கியது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில்,  பனங்காட்டீஸ்வரர் உடனுறை சத்தியாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை முதல்நாள் துவங்கி, ஏழு  நாட்களுக்கு சூரியன் ஒளி, கருவறையிலுள்ள சிவலிங்கத்தின் மீது பட்டு, அருகிலுள்ள சத்தியாம்பிகை மீதும் சூரிய ஒளி பட்டு வணங்குவது  வழக்கம். சூரியோதயம் ஆரம்பமாகி நேற்று காலை 6:15 மணிக்கு  சூரிய ஒளி முதலில் சிவலிங்கத்தின் பாதத்தில் பட்டது. பின், காலை 6:23 மணிக்கு,  சத்தியாம்பிகை மீது சூரிய ஒளி விழுந்தது. பக்தர்கள் சிவ கோஷத்துடன் வணங்கி தரிசனம் செய்தனர். கோவிலில் சூரிய பூஜைகளை கணேசன் குரு க்கள் ,கண்ணன் ஆகியோர் செய்தனர். விழா ஏற்பாடுகளை பனையபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஆறுமுகம், தர்மகர்த்தா சுந்தரம், உபய தாரர் சுந்தரம் செய்திருந்தனர். சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !