வஜ்ரங்கி சேவையில் நித்ய கல்யாணப்பெருமாள் அருள்பாலிப்பு!
ADDED :3830 days ago
காரைக்கால்: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நித்ய கல்யாணப் பெருமாள் வஜ்ரங்கி சேவையில் அருள்பாலித்தார். காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு மூலவர் ரங்கநாதப்பெருமாள், காலை 7.00 மணி முதல் இரவு 9.௦௦ மணி வரை வஜ்ரங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் நித்ய கல்யாணப் பெருமாள் சபையினர் செய்திருந்தனர்.