தன்வந்திரி பீடத்தில் தோஷம் நீங்க ஜாங்கிரி ஹோமம்!
ADDED :3831 days ago
வேலூர்: வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில், உலக நன்மை வேண்டி, ஜாங்கிரி ஹோமம் நடந்தது.வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில், உலக நன்மை, சகல விதமான நோய்கள், நவக்கிரக தோஷம் நீங்க, ஜாங்கிரி ஹோமம், நேற்று நடந்தது. காலை, 8 மணி முதல் மதியம், 1 மணி வரை ஜாங்கிரி ஹோமம் நடந்தது. தொடர்ந்து குபேர லட்சுமி ஹோமம், தன்வந்திரி ஹோமம், ஆஞ்சநேயர் ஹோமம் நடந்தது.பீடத்தில் அமைந்துள்ள, ஒன்பது அடி உயரமுள்ள சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு ஜாங்கிரி மாலை சாத்தப்பட்டது. இதில், ஆந்திர மாநிலம், விஜயவாடா சைவ ஷேத்திர பீடாதிபதி சிவசாமி கலந்து கொண்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். கலெக்டர் நந்தகோபால், "தன்வந்திரி பீடமும் தெய்வ தரிசனமும் என்ற நூலை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.