உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அண்ணாமலையார் மீது சூரிய ஒளி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் மீது சூரிய ஒளி!

திருவண்ணாமலை: திருநேர் அண்ணாமலையார் கோவிலில், சித்திரை மாதப்பிறப்பையொட்டி, ஸ்வாமி மீது சூரிய ஒளி பட்டது. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள, திருநேர் அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மாத பிறப்பின், முதல் நாளன்று, திருநேர் அண்ணாமலையார் மீது சூரிய ஒளி விழும் அபூர்வம் நிகழ்வது வழக்கம்.அதேபோல், இந்தாண்டின் சித்திரை மாத முதல் நாளான, நேற்று காலை, 6.58 மணிக்கு, கோவில் கருவறையில் உள்ள அண்ணாமலையார் மீது சூரிய ஒளி விழுந்தது. இதைக் காண அதிகாலை, 5 மணியிலிருந்தே, திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிரமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர், கோவில் வளாகத்தில் காத்திருந்து, இந்த அரிய காட்சியை கண்டு, ஸ்வாமியை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !