உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பின்னமான சிவலிங்கம்: தோண்டும் பணி நிறுத்தம்!

பின்னமான சிவலிங்கம்: தோண்டும் பணி நிறுத்தம்!

ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம் ஏரியில் புதைந்திருந்த சிவலிங்கத்தை தோண்டி எடுக்க முயன்றபோது, அது பின்னமாகி இருந்தது தெரியவந்ததால், தோண்டும் பணி கைவிடப்பட்டது. ஆதம்பாக்கம் ஏரியில், பழமையான சிவலிங்கம் ஒன்று இருந்தது. காலப்போக்கில் புதைந்து போன அந்த சிவலிங்கத்தை, அந்த பகுதியை சேர்ந்த ஆன்மிக அமைப்பினர் நேற்று தோண்டி எடுக்க திட்டமிட்டனர். ஐந்தடி ஆழம் வரை தோண்டப்பட்ட நிலையில் அந்த சிவலிங்கம் பின்னமாகியிருந்தது தெரியவந்தது. பின்னமான சிவலிங்கத்தை வழிபட கூடாது என்பது ஐதீகம். அதனால், தோண்டும் பணி கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !