உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பந்தகால் முகூர்த்தம்!

திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பந்தகால் முகூர்த்தம்!

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரம் மோற்சவ விழாவை முன்னிட்டு பந்தகால் முகூர்த்தம் நடந்தது. காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். தர்பாரண்யேஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று பந்தகால் முகூர்த்தம் நடத்தது. நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கோவிலில் வரும் மே 15ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றதுடன் துவங்கவுள்ளது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக மே 29ம் தேதி தேரோட்டம், 30ம் தேதி சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !