சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்!
ADDED :3825 days ago
திருச்சி: திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா நேற்று நடந்தது.இங்கு, சித்திரை திருவிழா கடந்த, 5ம் தேதி துவங்கியது.முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் கடந்த, 14ம் தேதி நடந்தது. இதையடுத்து, காமதேனு முத்துப்பல்லக்கில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்ப உற்சவம் நேற்று நடந்தது. இதற்காக, நேற்று காலை அம்மனுக்கு விசேஷ பூஜை செய்யப்பட்டது. காலை, 11:30 மணிக்கு அம்மன் தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு, 8:௦௦ மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளினார். இரவு, 10:30 மணிக்கு, தெப்ப மண்டபத்தில் இருந்து, அம்மன் மூலஸ்தானம் சென்றடைந்தார்.