வரதராஜபெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
ADDED :3892 days ago
பட்டிவீரன்பட்டி : சித்தரேவு வரதராஜபெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நேற்று முன் தினம் நடந்தது. வரதராஜப் பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் வரும் 30ல் திருக்கல்யாணம் நடைபெறும். மே 3ல் சுவாமி புறப்பாடு, 4ல் மருதாநதி ஆற்றில் இறங்குதல், 5ம் தேதி அய்யம்பாளையம் தசாவதாரம் நடக்கிறது. 7ம் தேதி பெருமாள் பூமாதேவியுடன் பூப்பல்லக்கில் பவனி வருகிறார். 8ல் மஞ்சள் நீராட்டுடன் சந்நிதி வந்தடைகிறார். ஏற்பாடுகளை செயல்அலுவலர் ராமசாமி, தலைமை குருக்கள் ராஜநரசிம்மஅய்யங்கார் செய்து வருகின்றனர்.