யானையின் பிளிறல்!
ADDED :3954 days ago
யானையின் முன் நெற்றியில்(மத்தகம்) லட்சுமி குடியிருப்பதாக ஐதீகம். இதனால், தினமும் கோயில் நடை திறந்ததும் கருவறையின் முன் யானைக்கு பூஜை நடத்தி சந்நிதியை சுற்றி வரச் செய்வர். யானையின் பிளிறல் ஓசை கேட்டு லட்சுமியின் மனம் மகிழும் என ஸ்ரீசூக்தம் என்ற நுõலில் கூறப்பட்டுள்ளது. லட்சுமி அவதரித்ததும், பூமியைத் தாங்கும் எட்டுத்திசை யானைகளும் புனித தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்கின. இவளை கஜலட்சுமி என்பர். கஜம் என்றால் யானை. கஜலட்சுமி சிற்பத்தை கோயில் கருவறை மீதும், தலைவாசலிலும் அமைப்பது வழக்கம்.