உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திரைத்தேர்

சித்திரைத்தேர்

ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர் வலம் வரும் சித்திரை தேர் திருவிழாவை விருப்பண்ணத் திருநாள் என்பர். இதற்குக் காரணம் அரங்கநாதர் கோயிலில் இருந்த பெருமாள் முஸ்லிம் படையெடுப்பின்போது மறைத்து வைக்கப்பட்டார். அதனால் அறுபது ஆண்டுகள் இத்தேர்த் திருவிழா நடைபெறவில்லை. 1371ல் விருப்பண்ண உடையார் என்ற நாயக்க வம்ச மன்னர் மீண்டும் நடத்த ஏற்பாடு செய்தார். அதனால், இத்திருவிழாவை அவரது பெயரைக் கொண்டே விருப்பண்ணத் திருநாள் என அழைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !