அங்காளம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை
ADDED :5220 days ago
காவேரிப்பபட்டணம்: காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெரு அங்காளம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடக்கிறது. இதையொட்டி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. இன்று மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அம்மன் பிரஹார உற்சவம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில் அமாவாசையையொட்டி நாளை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. காலை 10 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மதியம் 1 மணிக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று இரவு 9 மணிக்கு சாமபூஜை, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் தண்டபாணி, சக்திவேல் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.