திரவுபதியம்மன் கோவில் புனரமைப்பு பணி விஜயேந்திரர் பார்வை!
ADDED :3818 days ago
புதுச்சேரி; முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் 1.8 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. கோவில் புனரமைக்கும் பணியை, காஞ்சி சங்கர மட விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று பார்வையிட்டார். சபாநாயகர் சபாபதி, மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு கழக சேர்மன் பாண்டியன், மகளிர் ஆணைய தலைவி சுந்தரி, இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் அறங்காவலர் குழுவினர் உடனிருந்தனர்.