உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துளுக்கான மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

துளுக்கான மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

திருபுவனை: மதகடிப்பட்டு பாளையம் துளுக்கான மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு அம்மன் வாகனங்களில், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று நடந்த தேர்த் திருவிழாவையொட்டி காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் பொங்கலிட்டு, படையல் வைத்தனர். தொடர்ந்து 12.30 மணிக்கு திருத்தேர் வீதியுலா நடந்தது. மாலை 4:00 மணிக்கு செடல் அணித்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி சக்கரவர்த்தி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !