உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்குரு சம்ஹார மூர்த்தி கோவில் கும்பாபிஷேகம்

சத்குரு சம்ஹார மூர்த்தி கோவில் கும்பாபிஷேகம்

கரூர்: கரூர் தாலுகா அலுவலகம் முன் அமைந்துள்ள தீயணைப்புத்துறை அலுவலக வளாகத்தில், சத்குரு சம்ஹார மூர்த்தி ஸ்வாமிகள் கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை, 6.30 மணி முதல் 8.30 மணி வரை கோவிலில் விநாயகர் பிரதிஷ்டை, ராகு, கேது பிரதிஷ்டை, ஆவுடையாருடன் கூடிய சிவலிங்க பிரதிஷ்டையுடன் கும்பாபிஷேகம் நடந்தது. ஐயப்பன் கோவில், முரளி சிவாச்சாரியார் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். கும்பாபிஷேகத்தில், வெண்ணைமலை சபரீஷன் சித்தாஸ்ரமம் பாண்டுரங்க ஸ்வாமிகள், சத்குரு சம்ஹார மூர்த்தி ஸ்வாமிகள் அறக்கட்டளை தலைவர் கந்தசாமி, பொருளாளர் பாஸ்கர், செயலாளர் சண்முகம், உதவி தலைவர் ஜெயராஜ், புலவர் சிவ செல்வராஜ் ஸ்வாமி பாடல்களை பாடினார். நிகழ்ச்சியை மேலை பழனியப்பன் மற்றும் வி.ஏ.ஓ., மருதநாயகம் தொகுத்து வழங்கினர். கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானமும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !