மவுனயோகி கோவிலில் பவுர்ணமி பூஜை
ADDED :3815 days ago
திருத்தணி: ராமச்சந்திர மவுனயோகி சுவாமி கோவிலில், குரு பூர்ணிமா பவுர்ணமி பூஜை நேற்று நடந்தது. திருத்தணி அடுத்த, மாம்பாக்கசத்திரம் கிராமத்தில், ராமச்சந்திர மவுனயோகி சுவாமி கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை மாத பவுர்ணமி விழா வெகுவிமர்சையாக நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று, குருபூஜை மற்றும் குரு பூர்ணிமா பூஜை நடந்தது. விழாவையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மதிய பூஜையும், இரவு, 7:00 மணி சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இரவு, 8:00 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.