விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
ADDED :3814 days ago
சென்னை: விருகம்பாக்கம், வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று, ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. விருகம்பாக்கம், சீப்ரோஸ் கார்டன், வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று, ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, காலை, 8:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து, காலை 9:15 மணிக்கு, யாத்ரா தானம், கோபுரம் விமான கும்பாபிஷேகம், மூலவர் வரசித்தி விநாயகர் கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு, மகா அபிஷேகம், தீபாராதனை பிரசாதம் வழங்கி, எஜமான் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.