காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
ADDED :3814 days ago
உத்தமபாளையம் : உத்தமபாளையம் தெற்கு தெருவில் அப்பாஜியாபிள்ளை சந்தில் உள்ள காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டு நாட்களாக சிறப்பு யாகபூஜைகளும், அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாகபூஜைகள் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. காலை 10 மணிக்கு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்ட போது "ஓம் காளி ஜெய் காளி என பக்தர்கள் கோஷங்கள் எழுப்பினர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விசேஷ பூஜைகளும், அபிஷேக ஆராதானைகளும் நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை முன்னாள் வி.ஏ.ஓ., சித்தார்த்தன் உள்ளிட்ட கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.