முத்தியாலம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :3814 days ago
திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த, தெள்ளாரில் உள்ள முத்தியாலம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, முத்தியாலம்மன் அலங்கரிக்கப்பட்ட தேர், கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு, நெற்குணம் சாலை, திண்டிவனம் சாலை, கிழக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி, கம்மாளர் தெரு வழியாக சென்று நிலை அடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, வடம் பிடித்து தேரை இழுத்தனர். தெள்ளாரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த, பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.