பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம்!
ADDED :3814 days ago
பவானி : பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரருக்கு கல்யாணம் நடந்தது. முன்னதாக வேத ஆகம முறைப்படி 16 வகையான திரவியங்களை கொண்டு ஹோமம் நடந்தது. அதன் பின் தீபாராதனை நடைபெற்றது.பாலாஜிசிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசை ஒலிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் ஸ்வாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் உற்சவ மூர்த்திகள் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
* சத்தியை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தங்க காப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். கர்நாடகா மாநில பக்தர்கள் நேற்று அதிகளவில் கோவிலில் காணப்பட்டனர். கோவில் துணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.