உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு தாராபிஷேகம்

அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு தாராபிஷேகம்

திருவண்ணாமலை: அக்னி நட்சத்திர தொடக்கத்தை முன்னிட்டு, அண்ணாமலையார் கோவிலில் தாராபிஷேகம் நடந்தது. அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு, சிவபெருமானை குளிர்விக்கும் நோக்கில் அனைத்து, சிவாலயங்களிலும் தாராபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள மூலவருக்கு தாராபிஷேகம் நடந்தது. நேற்று காலை அண்ணாமலையார் கோவில், திருநேர் அண்ணாமலையார் கோவில், அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் தாராபிஷேகம் நடந்தது. வரும், 29ம் தேதி வரை, தாராபிஷேகம் தொடர்ந்து, 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !