அடைக்கனூரில் கோயில் விழா
ADDED :3808 days ago
வேடசந்தூர்: தட்டாரப்பட்டி ஊராட்சி அடைக்கனூரில், காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. கரகம் பாலித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து, இன்று (மே 6) அதிகாலை 3 மணிக்கு எருமைக்கிடா வெட்டு, நாளை காலை 11 மணிக்கு அம்மன் ஆணிப் படுக்கையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிகளை தொடர்ந்து, நாளை மாலை 5 மணியளவில், அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாட்டினை பூஜாரி அம்மையப்பன் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர்.