விநாயகர் கோவிலில் சங்கட நிவாரண ஹோமம்
ADDED :3879 days ago
திருவள்ளூர்: பஞ்சேஷ்டி காரிய சித்தி கணபதி கோவிலில், நாளை, சங்கட நிவாரண ஹோமம் நடக்கிறது. திருவள்ளூர் மாவட்டம், பஞ்சேஷ்டியை அடுத்துள்ள நத்தம் (இகணபாக்கம்) கிராமத்தில் உள்ளது காரிய சித்தி கணபதி, ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், சங்கடஹர சதுர்த்தி அன்று, சங்கட நிவாரண ஹோமம் நடைபெறும். இம்மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சங்கட நிவாரண ஹோமம், நாளை, மாலை 4:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை, சகஸ்ரநாம அர்ச்சனை, விசேஷ அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெறுகிறது.