வில்லியனுார் ராமபரதேசி ஜீவ பீடத்தில் குரு பூஜை விழா!
ADDED :3811 days ago
புதுச்சேரி: வில்லியனுார் மூலக்கடையில் அமைந்துள்ள ராமபரதேசி சுவாமி ஜீவ பீடத்தில், குரு பூஜை விழா நேற்று நடந்தது. குரு பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், ராமபரதேசி சுவாமிகள் உருவப்படம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, திருவடி புகழ்ச்சி, அருட்பெருஞ்ஜோதி ஆன்மிக வழிபாட்டு சபையினரின் பாராயணம் நடந் தது. காலை 10:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. பகல் 12:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 5:30 மணியளவில் சி த்தரிஷி ஞானிகளின் பக்தி பாடல் இசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை சத்குரு ராமபரதேசி சுவாமிகள் சேவா டிரஸ்டியினர் செய்திருந்தனர்.