பாடலீஸ்வரர் கோவிலில் ஜூன் 1ம் தேதி தேர் திருவிழா!
ADDED :3809 days ago
கடலூர்: கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழா வரும் 23ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. கடலூர், திருப்பாதிரிப் புலியூரில் உள்ள பாடல் பெற்ற ஸ்தலமான பாடலீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி பெருவிழா வெகு விமர்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான வைகாசிப் பெருவிழா வரும் 23ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கி வரும் ஜூன் 5ம் தேதி வரை நடக்கிறது. முக்கிய திருவிழாவான தேர் திருவிழா வரும் ஜூன் 1ம் தேதி காலை 9:00 மணிக்கு நடக்கிறது. இத்தகவலை கோவிலின் செயல் அலுவலர் ரத்தினாம்பாள் தெரிவித்துள்ளார்.