சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்ச பிரகார விழா
ADDED :3808 days ago
திருச்சி, : சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வசந்த உற்சவ விழா நேற்று துவங்கியது. வரும், 20ம் தேதி வரை விழா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான பஞ்ச பிரகாரம் வரும், 15ம் தேதி நடக்கிறது.பஞ்ச பிரகார விழாவையொட்டி, நேற்று காலை அம்மன் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளினார். விழாவை முன்னிட்டு தினமும், அம்மன் கேடயத்தில் புறப்பாடு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அம்மன், ஐந்து பிரகாரங்களிலும் உலா வரும் நிகழ்ச்சி வரும், 15ம் தேதி நடக்கிறது. 16ம் தேதி முதல், 20ம் தேதி வரை தினசரி இரவு, 10 மணிக்கு அம்மன் தங்க சிம்ம வாகனம், முத்து பல்லக்கு, தங்க கமல வாகனம், வெள்ளி குதிரை வாகனம், வெள்ளி காமதேனு வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.