உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுக்கோட்டை பூமாரியம்மன் கோவில் திருவிழாவில் படுகளம்

புதுக்கோட்டை பூமாரியம்மன் கோவில் திருவிழாவில் படுகளம்

புதுக்கோட்டை, : புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள பிலிப்பட்டியில் புகழ்பெற்ற பூமாரியம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, அழகம்பட்டி ஊரணியில் இருந்து, கரகம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து ஸ்வாமி படைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி சுமந்தும், வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து, பொங்கல் வைத்து வழிபாடும், கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், படுகளமும், வாணவேடிக்கையும் நடந்தது.திருவிழாவில் பிலிப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !