உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா

உடுமலை கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா

உடுமலை : கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில், சித்திரை திருவிழாவில், நேற்று அம்மன் தேர் உலா நடந்தது. உடுமலை அருகே கொழுமத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில், சித்திரை திருவிழா ஏப்., 21ல் துவங்கியது. மே, 5ம் தேதி வரை, தினமும் ஐந்து கால பூஜை, அபிேஷக ஆராதனை, விேசஷ அலங்காரங்கள் நடந்தன. மே, 5ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து, அம்மன் வீதியுலாவும் நடந்தது. நேற்றிரவு, 9:00 மணிக்கு, திருத்தேர் உலா நடந்தது. கொழுமத்தை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.இன்று, காலை, 10:30 மணிக்கு, மஞ்சள் நீராட்டும், இரவு, 8:00 மணிக்கு, நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 12ம் தேதி வரை, தினமும் அம்மனுக்கு, அபிேஷகம், அலங்கார பூஜை நடகிறது; வரும், 13ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, மகாஅபிேஷகம், சிறப்பு பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !