உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி மாகாளியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா

அவிநாசி மாகாளியம்மன் பொங்கல் பூச்சாட்டு விழா

அவிநாசி : பழங்கரை ஊராட்சி, அவிநாசி லிங்கம்பாளையத்தில் உள்ள ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில், பொங்கல் பூச்சாட்டு விழா, கடந்த மாதம், 14ல், மஞ்சள் முடிப்புடன் துவங்கியது. 30ல் பொட்டுசாமி பொங்கல் வைத்தல், அபிஷேகம் ஆகியன நடைபெற்றது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை அடைந்தது.பின், அம்மனுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, சிறப்பு அலங்கார பூஜை, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிறப்பு அலங்கார பூஜை செய்து, கும்பம், கங்கையில் விடப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டு விழா மற்றும் அன்னதானம் வழங்குதல் ஆகியவற்றுடன், திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !