பழநி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.60 கோடி!
ADDED :3806 days ago
பழநி: பழநி கோயில் உண்டியலில் 14 நாட்களில் ரூ. ஒரு கோடியே 60 லட்சத்தில் 18 ஆயிரம் காணிக்கையாக கிடைத்துள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது.
இதில் ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 60 லட்சத்தி 18 ஆயிரத்து 809மும், தங்கம் 608 கிராமும், வெள்ளி 8 ஆயிரத்து 400 கிராம், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் கரன்சி நோட்டுக்கள் 358 கிடைத்துள்ளது. தங்கத்திலான வேல், செயின், வளையல், மோதிரம், நாணயம், திருமாங்கல்யம் மற்றும் வெள்ளியிலான ஆள் உருவம், வேல், பாதம், கொலுசு போன்றவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.