திருமண வீட்டில் தேங்காய் கொடுத்து அனுப்புவது ஏன்?
ADDED :3883 days ago
சுபநிகழ்ச்சிக்கு அழைக்கும்போதும், வழியனுப்பும் போதும் லட்சுமியின் அம்சமான வெற்றிலை,பாக்கு கொடுப்பது வழக்கம். இதனை தாம்பூலம் என்பர். சுபநிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்கள் மீண்டும் இன்னொரு சுபவிஷயத்தில் சேர வேண்டும் என்பதற்காக இவ்வாறு தரும் வழக்கம் உருவானது. தாம்பூலத்தோடு தேங்காய், பழம், இனிப்பு, சாக்லெட் சேர்த்து கொடுத்ததெல்லாம் பிற்காலத்தில்!. தற்போது வெற்றிலை, பாக்கு வழக்கம் குறைந்து விட்டதால் தேங்காய், பிஸ்கட், தின்பண்டங்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.