திருமலை சமணர் படுகை: பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிப்பு!
ADDED :3797 days ago
சென்னை: சிவகங்கை மாவட்டம், திருமலை கிராமத்தில், பாறை ஓவியம் மற்றும் சமணர் படுகைகள் அமைந்துள்ள பகுதி, பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை கிராமத்தில், பாறை ஓவியம், தமிழ் பிராமி கல்வெட்டுகள், சமணர் படுகைகள், குடைவரைக் கோவில் மற்றும் வட்டெழுத்து கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட இடம், 16 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.இங்குள்ள புராதன நினைவு சின்னத்தை, பாதுகாக்கப்பட்ட சின்னமாக, கவர்னர் அறிவித்துள்ளார். இவ்விவரம், தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.