உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாஞ்சாலியம்மன் கோவிலில் தீ மிதி விழா

பாஞ்சாலியம்மன் கோவிலில் தீ மிதி விழா

செஞ்சி: நல்லாண் பிள்ளை பெற்றாள் பாஞ்சாலியம்மன் கோவிலில் தீ மிதி விழா நடந்தது. செஞ்சி தாலுகா நல்லாண் பிள்ளை பெற்றாள் பாஞ்சாலியம்மன் கோவில் 99வது ஆண்டு சித்திரை வசந்த விழா கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. இதை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் அபிஷேக, அலங்காரம் செய்தனர். மகா பாரத சொற்பொழிவு நடந்தது. கடந்த 14ம் தேதி அரவாண் பலி, துரியோதணன் படுக ளம் நடந்தது. மாலை 5 மணிக்கு சக்தி கரகம் ஜோடிக்கப்பட்டது. தொடர்ந்து 6 மணிக்கு காப்பு அணிந்த பக்தர்கள் தீமிதித்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் குலசேகரன், எத்திராஜன், துரைராஜன் ஆகியோர் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !