ஸ்ரீவி., வடபத்ர சயனர் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர் கோயில் கும்பாபிஷேகம் மே 22ல் நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 9 மணி முதல் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. இங்கு வடபத்ரசயனர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி வராகர், சக்கரத்தாழ்வார்,பெரியாழ்வார், தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரம், விமானங்கள் மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும், மே 22 காலை 8 மணிக்குமேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு கோயில் புதுப்பிக்கபட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. ராஜகோபுரத்தில் கலசத்திற்கு செல்வதற்கு லிப்ட் வசதி, வடபத்ரசயனர் சன்னதியில் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ராப்பத்து மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. நான்குநேரி வானமாமலை ஜீயர் கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்டார். விழா ஏற்பாடுகளை நாச்சியார் சாரிட்டி டிரஸ்ட் தலைவர் ராமசுப்பிரமணிய ராஜா, தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா செய்துவருகின்றனர்.