கரூர் அம்மனுக்கு பூச்சொரியல் விழா கோலாகலம்: பக்தர்கள் பரவசம்!
ADDED :3801 days ago
கரூர்: கரூரில் நடைபெறும் பெரிய திருவிழாக்களில் அம்மன் பூச்சொரியல் விழாவும் ஒன்றாகும். நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தத்தம் பகுதியில் இருந்து அம்மனை பல்வேறு விதமாய் அலங்கரித்து வண்ணவிளக்குகள் மின்னும் வாகனங்களில் ஊர்வலமாக கொண்டுவந்து ஒரு இடத்தில் சேர்ப்பார்கள்.
வரும் வாகனங்களில் பக்தர்கள் ஆங்காங்கேதரும் பூக்களையும் பெற்றுக்கொள்வார்கள். இப்படி கொண்டுவந்த பூக்களை கரூர் அம்மனுக்கு பூச்சொரியல் விழாநடத்தி மகிழ்வார்கள்.விடிய விடிய நடைபெற்ற இந்த விழாவினை அம்மனின் பக்தரும் தினமலர்.காம் வாசகருமான சம்பத்குமார் என்பவர் அற்புதமாக படமாக்கியுள்ளார். அம்மனின் பக்தர்கள் மனங்குளிர பார்த்து பரவசமடைய இங்கே அனைத்து அம்மன்கள் படமும் பதிவிடப்படுகிறது.