கோபாலகிருஷ்ண ஸ்வாமி சம்ப்ரோஷண விழா
ஓமலூர் : சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த, காமலாபுரம் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ருக்மணி சத்யபாமா சமேத கோபாலகிருஷ்ண ஸ்வாமி கோவில் திருப்பணிகள் முடிவுற்று, சம்ப்ரோஷண விழா, நாளை (மே, 20) நடக்கிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் கணபதி ஹோமம், குருபூஜையும், விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், பெரியகுளம் கிருஷ்ண சைதன்யராய் குழுவினரின் நாமமாலை, பெங்களூர் கவிதா லட்சுமி குழுவினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி, பஜனை நடந்தது.நேற்று, நாதஸ்வர கச்சேரி, ரக்ஷாபந்தனம், தீர்த்தகுடம் எடுத்தல், வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், பூர்ணாஹூதி, சேலம் ராகவேந்திரா டிவைன் சொசைட்டி குழுவினரின் பக்தி இன்னிசை நடந்தது.இன்று (மே, 19) காலை, 8 மணிக்கு, யாகசாலை பிரவேசம், கலசபூஜை, அக்னி பிரதிஷ்டை, சுதர்ஸன ஹோமம், தன்வந்திரி ஹோமம், மாலை, 4 மணிக்கு பிம்பசுத்தி திருமஞ்சனம், 5 மணிக்கு நாம பஜனை பக்தி பாடல், 6 மணிக்கு சதுஸ்தாஜ பூஜை, மூல மந்திரஹோமம், பூர்ணாஹூதி, 7 மணிக்கு நாம சங்கீர்த்தனம், இரவு, 10 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது.நாளை (மே, 20) காலை, 7 மணிக்கு கோ பூஜை, கலச ஆராதனை, மஹா பூர்ணாஹூதியும், 9 மணிக்கு மேல், 10 மணிக்கு ருக்மணி சத்யபாமா சமேத கோபாலகிருஷ்ண ஸ்வாமி மற்றும் பரிவார மூர்த்திகள் மஹா கும்பாபிஷேகமும், 11 மணிக்கு மஹாசன அன்னதானமும் நடக்கிறது.இரவு, 7 மணிக்கு புஷ்ப பல்லக்கில் ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.