ராஜேந்திர சோழரின் குலதெய்வம்!
ADDED :3965 days ago
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள துர்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் ராஜேந்திர சோழரின் குலதெய்வம். ஒன்பது வயதுச் சிறுமியின் வடிவில், சிரித்த முகத்துடன், இருபது திருக்கரங்களுடன் மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் அருள்பாலிக்கிறாள் தேவி. இத்தகைய கோலத்தில் துர்க்கையைக் காண்பது அரிது. இவளை மங்கள சண்டி என்று அழைக்கின்றனர். திருமணத்தடையை நீக்கும் இந்த அம்மனை குழந்தைப் பேறு இல்லாதவர்கள், வேண்டினால் குழந்தைப்பேறு அருள்கிறாள்.