சேதுக்கரை அகத்திய மாமுனிவர் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :3793 days ago
கீழக்கரை: சேதுக்கரை சின்னக்கோயில் அகத்தியர் தீர்த்தம் அருகே உள்ள வெற்றிவிநாயகர், அகத்திய மாமுனிவர் கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9.30 மணி முதல் வேதமந்திரங்கள், தமிழிசை பாடல்கள் முழங்கின. காலை 10. 30 மணிக்கு கோபுர கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். அன்னதானம் நடந்தது. சென்னை ரகுபதி, திருப்புல்லாணி ராமதாஸ், பரமக்குடி சவுராஷ்டிரா சபை அகஸ்தியன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.