உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாலசமுத்திரத்தில் நான்கு கோயில்கள் ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம்

வாலசமுத்திரத்தில் நான்கு கோயில்கள் ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வாலசமுத்திரத்தில் ஸ்ரீபாலவிநாயகர், ஸ்ரீவரதராஜபெருமாள், சந்தனமாரியம்மன், உச்சினிமாகாளியம்மன் கோயில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. வாலசமுத்திரத்தில் உள்ள நான்கு கோயில்களின் கும்பாபிஷேகம் மே 20 ம் தேதி துவங்கியது. யாகசாலைகள் அமைக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், கஜபூஜை, கோபூஜைகள் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு சிவன் கோயில் பட்டர் செல்வம் தலைமையில் புனித நீர் குடங்கள் மேளதாளத்துடன் எடுத்துச் செல்லப்பட்டது. இதில் வரதராஜபெருமாள் கோயில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா தீபாரதனை நடந்தது. இதனை தொடர்ந்து பால விநாயகர், சந்தனமாரியம்மன், உச்சினிமாகாளியம்மன் கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின் கோயில் மூலஸ்தானத்தில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், மற்றும் கம்மவார் சமுதாய சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !